40 சிகரெட் குடித்த சிறுவனுக்கு 10 வயதில் ஏற்பட்ட மாற்றம்


இந்தோனேசியாவில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் 2 வயது மதிக்கத்தக்க அர்டி ரிஸல் என்ற சிறுவன் நாள் ஒன்றுக்கு 40 சிகரெட் குடிக்கிறான் என்ற செய்தி வெளியானது, அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பரவின.

தற்போது அச்சிறுவன்  24 கிலோ எடை குறைந்து ஸ்மார்ட்டாக வலம் வருகிறான்.

சிறுவயதில் தொடர்ந்து சிகரெட் குடித்து வந்ததால், சிறுவனுக்கு அளவுக்கு அதிகமாக பசி எடுத்துள்ளது.தொடர்ந்து உணவுகளை எடுத்துக் கொண்டதால் எடையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியதாம், சிறுவனின் நிலையை அறிந்து கொண்ட இந்தோனேசிய அரசு உதவி செய்ய முன்வந்தது.

இதன்படி இவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 24 கிலோ எடை குறைந்ததுடன் சிகரெட் பழக்கத்தையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ளான்.சிறுவனின் இத்தகைய மாற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த பலரும் அரசுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *