இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட மனிதர் ராபின் வில்லியன்ஸ்


கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், தனது தேடல் இயந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பட்டியலை அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் ஷிங்கல் தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், ஆஸ்கார் விருது வென்ற அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது மரணம் தொடர்பான செய்தி இந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து உலகக் கோப்பை கால்பந்து, எபோலா இரண்டும் இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளன.

உயர்ந்த ஆற்றலும், விறுவிறுப்பான மேம்பாடும் கொண்ட ராபின் வில்லியம்ஸ், நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகள், பல வெற்றி பெற்ற தொலைக்காட்சித் தொடர்கள், அனைத்து நாட்டு மக்களும் ரசித்த ‘ஜீமான்ஜி’ உட்பட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் மிகப் பிரபலமாக இருந்தவர்.

உலகையே தன் திறமையால் சிரிக்க வைத்த ராபின் வில்லியன்ஸ் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு உணர்ச்சி பெருக்கோடு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மலேசியன் ஏர்லைன்ஸ், உக்ரைன் மற்றும் அனிமேஷன் படமான ‘ப்ரோஜன்’, ஐஸ் பக்கெட் சேலன்ஜ் போன்றவையும் கூகுல் தேடலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *