அமேஸான் நிறுவனத்துக்கு அனுமதி | ஆளில்லா விமானங்களைப் பரிசோதித்துப் பார்க்க


அமேஸான் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக புத்தகங்கள், குறுந்தகடுகள் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதற்காக உருவாக்கி வரும் ஆளில்லா விமானங்களைப் பரிசோதித்துப் பார்க்க அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்.ஏ.ஏ.) அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வியாழக்கிழமை அளித்த அனுமதிச் சான்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சோதனை முறையில் ஆளில்லா விமானத்தைப் பறக்கவிட அமேஸான் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த விமானம் தரையிலிருந்து 400 அடி உயரத்துக்கு மிகாமல், விமானத்தை இயக்குபவர், கண்காணிப்பவர் ஆகியோரின் பார்வையிலிருந்து விலகாமல் செலுத்தப்பட வேண்டும்.

எஃப்.ஏ.ஏ.விடம் பயிற்சிச் சான்றிதழும், மருத்துவச் சான்றிதழும் பெற்றவர் மட்டுமே அந்த விமானத்தை இயக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாங்கள் உருவாக்கி வரும் ஆளில்லா விமானத்தை பரிசோதித்துப் பார்க்க அமேஸான் நிறுவனம் எஃப்.ஏ.ஏ.விடம் அனுமதி கோரியிருந்தது.

எனினும், நீண்ட காலமாக எஃப்.ஏ.ஏ. அதற்கான அனுமதி அளிக்காததால், அந்த விமானத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவுக்கு வெளியே எடுத்துச் செல்லப் போவதாக அமேஸான் மிரட்டியது.

அதன் தொடர்ச்சியாகவே அமேஸானின் ஆளில்லா விமானப் பரிசோதனைக்கு எஃப்.ஏ.ஏ. அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *