இந்த ஆண்டு மட்டும் ஈரானில் 700 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றும் நாடு ஈரான். 2015-ல் முதல் ஆறு மாதத்தில் மட்டும் சுமார் 700 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் 1000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
”மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், பொதுமக்களுக்கான சுதந்திரமும் நடு நிலையும் குறைந்து காணப்படும் ஈரானில், நீதிமன்றங்கள் தொடர்ந்து மரண தண்டனை விதித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது’ என மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.