விசம் அற்ற உணவை உண்போம்


வவுனியாவில் சழூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பினரால் 30-12-2014 அன்று விசம் அற்ற  உணவை உண்போம் என்னும் தொனிப்பொருளில் இயற்கை வேளான் விஞ்ஞானி கலாநிதி.கே.நம்மாள்வார் அவர்களின் முதலாம் நினைவு கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது சழூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் எம்.ஜி.ரெட்ண காந்தன் தலைமையில் நடைபெற்றது.

சிறுநீரக பாதிப்பில் வவுனியா மாவட்டம் அனுராதபுர மாவட்டத்திற்கு அடுத்தபடியாக காணப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளப்பிரதேசம் அதிகளவான சிறுநீரக நோயாளிகளைக் கொண்டுள்ளது. விவசாயத்தில் அதிகளவான கிருமினாசினி மற்றும் உரப்பாவனைகளால் நிலத்தடி நீரில் விசம் கலந்து அதன் காரணமாக அதிகளவான சிறுநீரக பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

இதனைத்தடுப்பதற்கு முற்றுமுழுதான இயற்கை விவசாய முறைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக

ந.தேவகிருஸ்ணன் (இயற்கை வழி விவசாய ஆர்வலர்)

ஏ.நடராசா (ஓய்வு பெற்ற அரச பண்ணை முகாமையாளர்)

ஏஸ்.டொன்பொஸ்கோ (புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனிசிசக் கட்சி)

ஆகியோர் கலந்து கொண்டனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *