நகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்


வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர்.நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நகர சபை ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 9ஆம் திகதி நாங்கள் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டபோது.வீதியோர மரக்கறி வியாபாரிகளை அகற்றினோம். இதன்போது தனிநபரொருவர் அதனை புகைப்படமெடுத்தார். இது தொடர்பாக நாங்கள் விளக்கம் கோரியபோது.புகைப்படமெடுத்தவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.

இதனால் குறித்த நபரை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.

ஆனால்இ குறித்த நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வவுனியா பொலிஸார் அதற்கு மாறாக சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கச் சென்ற எங்களை முற்பகல் 11 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை பொலிஸ் நிலையத்தில் நீராகாரம் கூட வழங்காது தடுத்து வைத்திருந்து பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரை விடுவித்து,நகர சபை ஊழியர்களை த,டுத்து வைத்திருந்த வவுனியா பொலிஸாரை கண்டித்தும் குறித்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம்’ என தெரிவித்தார்.

 

இதேவேளை,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

PICT0229

PICT0226

PICT0225Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *