107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ள மத குரு


நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது.

அவர்களில் 10 பேரை விவாகரத்து செய்துவிட்டார். மீதமுள்ள 97 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு 185 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். திடீரென வீடியோவில் தோன்றிய அவர் தான் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்த இருப்பதாக அறிவித்தார்.

இது ஆன்லைன் மற்றும் சமூக வலை தளங்களில் வைரசாக பரவியுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *