ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை ‘ஷேரிங்’ செய்ய கூகுள் தடை


பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற இன்றைய சமூக வலைத்தளங்களுக்கு இணையாக முன்பு பாப்புலராக இருந்தவை ‘பிளாக்’ எனப்படும் வலைப்பூக்கள். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபாச தரவுகள் அடங்கிய விஷயங்களை தேடுதலில் கிடைக்க செய்ய கூகுளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுளுக்கு சொந்தமான பிரபல ‘Blogger’-ல் வரும் மார்ச் 23-ந்தேதி முதல் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை ‘ஷேரிங்’ செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், பாலுணர்வை தூண்டக்கூடிய ஆபாசக்காட்சிகள் அடங்கிய வீடியோக்களை அப்லோடு செய்யவும் தடைவிதிக்கப்படுகிறது.

இப்போது நடைமுறையில் இருக்கும் Blog-க்குகளில் ஏதாவது ஆபாச தரவுகள் (adult content) இருந்தால் கூகுள் விரைவில் அந்த Blog-களுக்கு Notification-களை அனுப்பும். எனினும், அந்த Blog-க்களில் உள்ள content எதையும் கூகுள் அழிக்காது. மாறாக, ‘அது’ மாதிரியான Blog-ஐ admin-கள் மட்டுமே பார்க்க முடிகிற வகையில் Private செய்யப்படும். ஏற்கனவே ஆபாச போட்டோ, வீடியோக்கள் அடங்கிய Blog-ஐ வைத்திருப்பவர்கள் Google Takeout-மூலமாகவோ அல்லது .xml file-ஆக எக்ஸ்போர்ட் செய்தோ Blog-லிருந்து நீக்கி சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியையும் கூகுள் வழங்கியுள்ளது.

புதிய பாலிசியை வெளியிட்டுள்ள கூகுள் இதுபற்றி மேலும் கூறுகையில், ‘‘ஆபாச காட்சிகளை நீக்குமாறு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தாலும் எங்களால் முழுமையாக அவற்றை இண்டர்நெட்டில் இருந்து நீக்கிவிட முடியாது. கலை, ஆவணப்படங்கள், விஞ்ஞான ஆய்வறிக்கைகளின் வடிவில் அவை இருக்கவே செய்யும். பிளாக்-ல் ஏதேனும் ஆபாச காட்சிகள் இருந்தால் Blogger செட்டிங்சில் ‘adult’ என்பதில் மார்க் செய்துவிடுங்கள். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் நாங்களே செய்துவிடுவோம்’’ என தெரிவித்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *