‘நாசா’ அனுப்பிய, ‘ஜூனோ’ விண்கலம்வெற்றிகரமாக சுற்றுப்பாதையில்


சூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழனை ஆராய்வதற்காக, அமெ-ரிக்-க விண்வெளி ஆய்வு நிறு-வ-னமான, ‘நாசா’ அனுப்பிய, ‘ஜூனோ’ விண்கலம், நேற்று காலை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது. ,

அப்போது, கலிபோர்னியாவில் அமைந்துள்ள, நாசா திட்ட கட்டுப்பாட்டு துறையின் வர்ணனையாளர், ‘ஜூனோவை வியாழனுக்கு வரவேற்கிறோம்’ என, உற்சாகமாக கூறினார். இந்த விண்கலம், இந்த கோளின் காலநிலை, புவிஈர்ப்பு, வாயு மண்டலம் ஆகியவற்றை ஆராய்ந்து பூமிக்கு
தகவல்களை அனுப்பும். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியது வியாழன். இது, புறக்கோள்கள் வகையைச் சேர்ந்தது. சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக உள்ளது.

ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 800 கி.மீ., பரப்பளவு உடையது. இதன் சுற்றளவு பூமியைப் போல, 11 மடங்கு பெரியது. வியாழனுக்கு, 28 துணை கோள்கள் உள்ளன.இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது. வாயுக்களின் பிரதிபலிப்பால் தான், பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது. அதிகப்படியான வாயுக்களால், இங்கு கடுமையான ஒரு அழுத்த நிலை காணப்படுகிறது. ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால், பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *