வசதிக்கேற்றாற் போல் மடித்துக் கொள்ளும் எல்.ஜி டி.வி


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இந்த வாரம் நடைபெறவுள்ள உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சியான CES 2016-ல் முன்னணி மின்னணு நிறுவனமான எல்ஜி புதிய வகை டி.வி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

18 இஞ்ச் அகலத்திரை கொண்ட இந்த டி.வி எல்.ஈ.டி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமான ஓ.எல்.ஈ.டி டிஸ்பிளே வசதி கொண்டது. இந்த டி.வி-யை செய்தித்தாளை சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளலாம்.

இந்த டி.வி தவிர 55 இஞ்ச் அளவு பிரம்மாண்ட திரை கொண்ட முன் பின் என்று இரண்டு புறமிருந்தும் பார்க்கும் வசதி கொண்ட செய்தித்தாள் அளவுக்கு மெல்லிய, வசதிக்கேற்றாற் போல் மடித்துக் கொள்ளும் டி.வி யையும் எல்.ஜி அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன் போட்டி நிறுவனமான சேம்சங், அண்மையில் இதே போல் மடித்துச் செல்லும் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இத்தகைய தொழில்நுட்பம் கொண்ட மின்னணு சாதனங்களுக்கான சந்தை அண்மைக்காலமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *