“வடக்கின் கில்லாடி” கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடும்மீன் அணி!


அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கின் 32 முன்னணி அணிகளை உள்ளடக்கி நடைபெற்று வந்த “வடக்கின் கில்லாடி” தொடரின் இறுதியாட்டம் அரியாலை பயிற்சி திடல் மைதானத்தில் நடைபெற்றது.

பாடும்மீன் மற்றும் யங்கென்றீஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இவ்வாட்டத்தின், முதல் பாதி ஆட்டம் நிறைவடைவதற்கு ஒரு நிமிடம் இருக்கையில் பாடும்மீன்  அணி தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற, முதல்  பாதி ஆட்டத்தில் பாடும்மீன் அணி 01:00 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் யங்கென்றீஸ் அணி ஆட்டத்தை சமப்படுத்தும் முயற்சியிலும், பாடும்மீன் அணி மேலதிக கோல்களைப் பெற்று கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் பயனாக பாடும்மீன் அணி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரண்டாவது கோலை பெற்றுக் கொண்டது. தொடர்ந்து ஆட்டத்தில் இரு அணியினராலும் வேறெந்த கோல்களையும் பதிவு செய்ய முடியாது போக, ஆட்ட நேர முடிவில் 02:00 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றி பெற்று 2018ம் ஆண்டிற்கான வடக்கின் கில்லாடி மகுடத்தைத் தனதாக்கிக் கொண்டது.
தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பாடும்மீன் அணி கில்லாடி கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *