பலத்த பாதுகாப்பு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பொங்கல் 


இலங்கையில் தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலையால் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டிய நிலையில் முல்லைத்தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசிப் பொங்கல் இம்மாதம் நடைபெற உள்ளது.

ஒவ்வொருவருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் தினத்துக்கு ஆலயம் நாடி வருவதுண்டு. இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் ஆலயங்களில்  வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயமும் ஓன்று.

பொங்கல் நிகழ்வு தொடர்பான பாதுகாப்பு ஏற்டபாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகசபையின் உப தலைவர்.கனகரத்தினம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பாரிய பாசல்களை கொண்டுவருவதை தவிர்த்து வழிபாட்டிற்கு வேண்டிய அர்ச்சனை பொருட்களை ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆலயத்திற்கு வரும் மக்கள் அனைவரும் அடையாள அட்டைகளுடன் வரவேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பித்தக்கதுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *