வவுனியாவை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன்!


கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலதிக சிகிச்சைக்காக பலரின் நிதியுதவியுடன் இந்தியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.

சில நாட்களாக இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த விதுசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முகநூலிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பெற்றோரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கோரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், வேறு சிலரும் பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவியிருந்தனர்.

நன்றி -Dhackshala



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *