அரசியலிலிருந்து கெட்டது செய்வதை விட 5 பேருக்கு நல்லது செய்வது சிறந்தது – வியாழேந்திரன்


அரசியல் கைதிகளின் விடுதலை, காணி மற்றும் இனப்பிரச்சினை, பெண் வாழ்வாதாரத் திட்டங்கள், விசேட தேவையுடையோருக்கான திட்டங்கள், மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சசினைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாகவும், தனது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காய்க்காவிட்டால், தற்போதுள்ள அரசாங்கத்தை எதிர்க்கத் தயாராக இருப்பதாக கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

3 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் நிதி அமைச்சு காணப்பட்ட போதும் கிழக்கில் இதுவரை எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை.

கிழக்கில் முஸ்லீம் சமூகம் துரித அபிவிருத்தியை அடைந்துள்ளது. பிள்ளையான் காலத்தில் துரித அபிவிருத்தி நடந்தது. இப்போது பிள்ளைகளுக்கு மலசலகூடங்கள் கூட இல்லை 50,000 வீடுகள் கட்டப்படவில்லை.

அரசியலிலிருந்து 50,000 பேருக்கு கெட்டது செய்வதை விட ஐவருக்கு நல்லது செய்வது நல்லது என வியாழேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் நடுநிலை வகித்தால், தானும் நடுநிலை வகிப்பதாகவும் அவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தால், தாம் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =