பிள்ளைகளை அடித்து வளர்ப்பது ஆபத்து!


அடிக்கிற கைதான், அணைக்கும் என்பது உண்மையோ, பொய்யோ, ஆனால், அடி வாங்குகிற குழந்தை, பின்னாளில் பெற்றோரையும், சமூகத்தையும் எதிர்க்கும் குணம் கொண்டவர்களாக மாறுகின்றனர்.

கடந்த, 50 வருடங்களாக, 1,60,000 குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், உளவியல் வல்லுனர்கள் இந்த முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். “பெற்றோர் தங்கள் குழந்தைகள் சொல்படி கேட்கவேண்டும் அல்லது தவறான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அடித்தாலும், குழந்தைகளிடம் அதற்கு நேர்மாறான விளைவுகளையே அது ஏற்படுத்துகிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் டைத்துள்ளன,” என்கிறார் ‘ஜர்னல் ஆப் பேமிலி சைக்காலஜி’ இதழில் அந்த ஆய்வுக் கட்டுரையை எழுதிய எலிசபெத் ஜெர்ஷாப்.

சிறுவயதில் பலமுறை அடிவாங்கும் குழந்தைகள், பின்னாளில் மூர்க்கத்தனம், மனநல சிக்கல்கள், வெளி உலகை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் உள்ள குழந்தைகளாக ஆகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.

அதுமட்டுமல்ல, அப்படி அடிவாங்கி வளரும் குழந்தைகள், வன்முறையில் நம்பிக்கை உள்ளவர்களாகவும், தங்கள் குழந்தைகளையும் அடி உதைக்கு உள்ளாக்குபவர்களாகவும் ஆகிவிடுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

 

 

நன்றி : தினமலர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *