இந்தோனேஷியாவின் அனாக் க்ரகடோ எரிமலை சீற்றம் அதிகரிப்பு


இந்தோனேஷியாவின் அனாக் க்ரகடோ எரிமலை சீற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை இரண்டாவது அதிகூடிய மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீற்றம் அதிகரித்துள்ளதால் குறித்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீற்றர் பகுதி அபாய வலயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அத்துடன், எரிமலை வழியாக பயணிக்கும் விமானப் பாதைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட குமுறலினால் இந்தோனேஷியாவின் சுண்டா நீரிணைப் பகுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இந்த ஆழிப்பேரலையில் சிக்கி குறைந்தது 430 பேர் உயிரிழந்துள்ளதுடன், 159 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, 1500 இற்கும் மேற்பட்டோர் ,காயமடைந்துள்ளதுடன், பெருமளவிலான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 2000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *