தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா?


தினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும் பலரும் சொல்லும் விஷயம். ‘அது என்ன 10,00 0ஸ்டெப்ஸ்… இதற்கென ஏதும் ஆய்வு நடத்தப்பட்டதா?’ என்றால், `கிடையாது’ என்பதுதான் பதில்.

ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தன் பீடோமிட்டரைப் (Pedometer) பிரபலப்படுத்த, தினமும் 10,000அடிகள் நடக்க வேண்டுமென விளம்பரம் செய்தது. மற்ற உலக நாடுகள் அதை அப்படியே நகல் எடுத்துக்கொண்டன.

இப்போது, உண்மையிலேயே இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. 17,000மூதாட்டிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களின் சராசரி வயது 72.

இதன் முடிவின்படி, `சராசரியாக 4,000அடிகள் தினமும் நடந்தாலே போதும்’ என்கிறார்கள். `7,500அடிகளுக்குமேல் நடப்பவர்களின் சக்தியில் எந்த மாற்றமுமில்லை’ என்கிறது இந்த ஆய்வு.

‘ஜிம்முக்குப் போவதுபோல உடற்பயிற்சிகளுக்காகத் தனியாகச் செலவு செய்யாமல், தினமும் நடந்தாலே பெண்களுக்குப் போதுமான வலிமை கிடைத்துவிடும்’ என்கிறது இந்த ஆய்வு.

நன்றி  -thinakaranLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *