ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின்  “வன்னியாச்சி”  நூல்


 

 

சென்னை புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி”  நூல் அறிமுகம் இன்று நடைபெற இருக்கின்றது. காலச்சுவடு பதிப்பகமாக வெளிவரும் இந்நூல் சுமார் 35 கதைகளைக் கொண்ட பெருந்தொகுதியாக வெளிவருகின்றது.

கவிஞர் சல்மா தலைமையில் சிறுகதையாசிரியர் தமயந்தி வெளியிட கவிதா முரளிதரன், சல்மா இருவரும் பெற்றுக்கொள்வார்கள்

எழுத்தாளர் கிருஷ்ணபிரபு நூலாசிரியர்  பற்றிய அறிமுகம் செய்ய தமயந்தி கவிதா மற்றும் சல்மா ஆகியோர் நூல் அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

காலச்சுவடு இயக்குனர் கண்ணன், கவிஞர் சல்மா மற்றும் இலக்கிய ஆர்வலர் யசோ கணேசன் ஆகியோர் இந்த நிகழ்வை ஒழுங்குசெய்துள்ளனர்.

பிரித்தானியாவைத்த தளமாகக் கொண்டு மிகப் பிரமாண்டமாக வளர்ந்துவரும் ஊடகமான ஐ பி சி தமிழ் குழுமத்தின் நேரடி ஒளிபரப்புப் பிரிவி – www.myibctamil.com  நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.

நேரடி ஒளிபரப்பு – http://myibctamil.com/partner/template.php?id=97

 

காலம் – 12/01/2018 மாலை 5.00 மணி

காலச்சுவடு அரங்கு

சென்னை புத்தகக் கண்காட்சி 2018

St. George’s Anglo-Indian Higher Secondary School (Opp Pachaiyappa’s College), Aminjikarai, ChennaiLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =