கிரேக்கத்தில் காட்டுத் தீயினால் 20 பேர் பலி!


 

கிரேக்கத்தில் பரவிவரும் காட்டுத் தீயினால் இதுவரையில் குறைந்தது 20 பேர்வரையில் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த நாட்டு அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்துடன் தீப்பரவல் ஏற்பட்டுள்ள தலைநகரை அண்டிய பகுதிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து அகன்றுவருகின்றனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்கு தங்களால் முடிந்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக கிரேக்கத்தின் பிரதமர் Alexis Tsipras தெரிவித்துள்ளார்.

எனினும், தீயை கட்டுப்படுத்துவது மிகக் கடினமாக இருப்பதாக தீயணைப்புத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீரப்பரவலால் 104 பேர் காயமடைந்துள்ளதுடன், 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களில் 16 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *