ஜூலை 31 இல் வில்பத்து காடழிப்பு மனு மீண்டும் விசாரணை!


பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தை அழித்து மக்களை குடியமர்த்துவதற்காக வழங்கப்பட்ட காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிட வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மனுவை, ஜுலை 31ஆம் திகதி முதல் ஆரம்பத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம் எடுத்துள்ளது.

வில்பத்து வனத்தை அண்மித்த பகுதிகளில் மக்களை குடியமர்த்த சட்டவிரோதமாக காணிகளை வழங்கியமை தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இம்மனுவை விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி ஜனக் டி சில்வா மற்றும் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *