வேலைக்கு செல்லும் பெண்களுக்கு..


பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், புதுமைப் பெண்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டப்படுகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

காலையில் செய்தித்தாள் படிப்பது, தேனீர் அருந்துவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே பாதியில் முடிந்து விடுகிறது. அவர்கள் கடிகாரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். அப்போது மனதில் ஏற்படும் பதற்றம் அவர்கள் உடம்பையும், உள்ளத்தையும் உலுக்கிவிடும்.

காலை நேர அவசர வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே பல வீடுகளில் தாய்மார்களுக்கு சவா லான விஷயமாக இருக்கும். தாயாரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும்.

அப்போது குழந்தைகளிடம் ‘உன் எதிர்காலத்திற்காக தான் நான் சம்பாதிக்கிறேன்’ என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? அந்தப் பருவத்தில் குழந்தைக்கு தேவை அம்மாவின் அரவணைப்புதான். பணமல்ல!. வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட பல வீடுகளில் குழந்தை களுக்கு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட மனநிலையில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? என்பதை பற்றி சிந்திக்க கூட அம்மாக்களுக்கு நேரம் இருக்காது.

காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும்.

வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்பது கூடுதல் குழப்பத்தை தரும். முடிந்த வரை முக்கியமான வேலைகளை செய்துவிட்டு மற்றதை ஒதுக்கி விட்டு மறுநாளைக்கு தேவையானவைகளை செய்து முடித்து விட்டு படுப்பதற்குள் போதுமென்றாகிவிடும். கால்வலி, உடம்பு வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

இப்படி பரபரப்பாக இயங்குபவர்கள் குழந்தைகளிடத்தில் பொறுமையாக கையாள பழகிக்கொண்டாலே சுமுகமாக செயல்பட தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் பக்குவமாக பேசி அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் பணி முடித்து வீடு திரும்பும்போது கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி செய்து வந்தால் இயல்பாகவே குழந்தைகள் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம்பிடிக்காமல் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள பழகி விடுவார்கள்.

 

நன்றி : தமிழ் ஈழம் | அதிர்வுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *