செல்வம் கொழிக்க குபேர பொம்மையை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்?


 எவ்வளவு செல்வம் கொழித்தாலும் அவை நீராய் வேகமாய் கரையாமல் இருக்க குபேர பொம்மையை வீட்டில் வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அதனை எப்படி வீட்டில் வைக்க வேண்டும் என்பது பற்றி காணலாம்.

குணம் நமது வாழ்க்கையை தீர்மானித்தாலும். இங்கு பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. பணம் சம்பாதிப்பவர்களுக்கு அது கைகளில் தங்குவதும் இல்லை.

இரவு பகலாக பாடுபட்டு சேர்த்தாலும் பணம் கையைவிட்டு சென்றுவிடுகிறது.  இந்நிலையில் குபேரரை வழிபட்டு வந்தால், வீட்டில் பணம் அதாவது செல்வம் பெருகும் என்கிறார்கள். எனவே குபேரரை வீட்டில் எப்படி வைத்து வழிபட வேண்டும் என்பதை வாஸ்து நிபுணர்கள் கூறியதை இப்போது பார்ப்போம்.

திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.

நாள்தோறும் சூரியோதத்தை காணும்முன் கிழக்கு திசை தான் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தை தரும். எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்துக்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.

வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை மிகவும் விசேஷம்.

அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.  ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால். வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள் குபேரருக்கு உகந்த நைவேத்தியம் ஆகும்.

 

நன்றி : EENADUINDIA.com

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *