மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்கள் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற Xzahirians ஆட்டம்


மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற Xzahirians ஆட்டம் கால்பந்து சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை, மார்ச் 15 ஆம் திகதி அல் அரபி விளையாட்டு அரங்கத்தின் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸாஹிராவின் பழைய மாணவர்கள் Veterans மற்றும் Elite என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடந்தேறிய இச்சுற்றுப் போட்டியில், 35 வயதிற்கு மேற்பட்டோர் Veterans கிண்ணத்திற்காகவும், 35 வயதிற்கு குறைந்தவர்கள் Elite கிண்ணத்துக்காகவும் போட்டியிட்டனர். Elite குழுவில் எட்டு அணிகளும் Veterans குழுவில் நான்கு அணிகளும் போட்டியிட்டனர்.

அத்துடன், ஸாஹிராவின் பழைய மாணவரும் தற்போது விளையாட்டுத்துறை ஆசிரியராகவும் பணியாற்றிவரும், ஸாஹிரா கல்லூரிக்கு கால்பந்து, கோலூன்றி பாய்தல் மற்றும் பல தேசிய மட்ட வெற்றிகளை பெற்றுத்தந்த ஸாமீல் (Z.A.M Zameel) அவர்களுக்கான கௌரவிப்பாக ZAM Zameel வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *