82 வருடகால சாதனையை முறியடித்த யாஷிர் ஷா!


பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா, 33 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி, மிக விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளது.

இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா, நியூசிலாந்து அணியின் சோமர்வில்லேவை அவுட்டாக்கி, டெஸ்ட் போட்டிகளில் தனது 200 விக்கெட்டைப் பதிவு செய்தார்.

1936 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் கிளாரே கிராம்மெட் 36 போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன் மூலம் மிகக்குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இப்போது, 82 ஆண்டுகளுக்குப் பிறகு யாஷிர் ஷா 33 போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தி அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *