காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது!


நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் தற்போது தனது அங்கீகாரத்தை இழக்கும் பீதியில் உள்ளது என்றும், இதனால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது எனவும் கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

“அரசியல் சாசனம் 352 தவறாக பயன்படுத்திய இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார்.

இதன்காரணமாக தான் காங்கிரஸ் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட பெற முடியவில்லை.

நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இன்று தனது அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் உள்ளது.

அந்த கட்சியில் இருந்தால் எதிர்காலம் இல்லை என்ற மனநிலை அதன் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி நிலைக்கு எதிராக போராடியவர்களான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நெருக்கடி நிலைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக போராடி வெற்றி கண்டது. சர்வாதிகார போக்கால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி – Krushnamoorthy DushanthiniLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *