நியுசிலாந்தின் பிரதமர் நிராகரிப்பு!


சிறிலங்காவைச் சேர்ந்த அகதிகள் நியுசிலாந்தை இலக்கு வைத்து படகு பயணங்களை மேற்கொள்ளக்கூடும் என்ற எச்சரிக்கையை, நியுசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நிராகரித்துள்ளார்.

நியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. 131 இலங்கையர்கள் அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்து நோக்கி பயணித்த வேளையில் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து, இவ்வாறான பல ஏதிலிகள் படகு மூலம் தாஸ்மான் தீவு ஊடாக நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்டிருப்பதாக, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் எச்சரித்திருந்தார். ஆனால் இதனை நியுசிலாந்து பிரதமர் மறுத்துள்ளார்.

மேலும் ஆசிய நாடுகளில் இருந்து ஆட்கடத்தற்காரர்களின் படகுகள் தங்களது பயணங்களை ஆரம்பிக்க முடியாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =