உடம்பில் நோய் உள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்.


நம்முடைய உடலுக்கு ஏதாவது நோய் வருவதற்கு முன்பாக உடலில் சில அறிகுறிகள் தோன்றுகின்றன. அது என்ன என்று முன்பே தெரிந்து கொண்டு நோய்கள் உடலில் வரமால் பார்த்து கொள்ளுங்கள்.

வயிற்று வலி, வயிற்றுக் கடுப்போ அல்லது வயிற்றுப் போக்கோ இருந்தால் அது உங்களுடைய கைவிரல் நகங்களில் சுத்தமில்லை என்று அர்த்தம்.
முகத்தில் ஏதேனும் அரிப்போ நமைச்சலோ எடுத்தது என்றால் உங்களுடைய கூந்தலில் சுத்தம் இல்லை என்று அர்த்தம்.
கண்களிலோ மூக்கிலோ தொடர்ந்து அரிப்பு எடுத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகின்றது என்று அர்த்தம்.
காதுகளில் குடைச்சலோ வலியோ வந்தது என்றால் காய்ச்சல் வரப் போகின்றது என்று அர்த்தம்.
இடுப்பு வலி தொடர்ந்து உங்களுடைய முதுகுத் தண்டு அல்லது இடுப்புப் பகுதியில் வலி எடுக்குமானால் அந்த பகுதியில் உள்ள இரண்டு முக்கிய எலும்புகளும் மிருதுவாகி, தேய்மானம் உண்டாகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
கால் பாதங்களில் அதிக அளவில் வெடிப்புகள் உண்டாகிறது என்றால், உடலில் அதிக அழுத்தமும் உடல் சூடும் இருக்கிறது என்பது பொருள்.
கை மடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்குகளில் கருப்பான பட்டை விழுந்தால் உங்களுடைய கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என்பது பொருள்.
உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரந்து அதிக அளவில் அடிக்கடி பசி எடுக்கிறது என்றால், அது நீரிழிவின் ஆரம்பம் என்பது பொருள்.
உதட்டின் மேல் தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிவது போன்றவை ஏற்படுமானால் உங்களுடைய உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப் பசையும் குறைந்து விட்டது என்று பொருள்.
தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் அதிகரித்து வாயு தேங்கியிருக்கிறது என்று அர்த்தம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *