லா லிகா கால்பந்து தொடர்


ஸ்பெயினில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து தொடரில், மாட்ரிட்டில் அரங்கேறிய லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலென்சியாவை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் தரப்பில் கரிம் பென்ஜிமா 61-வது மற்றும் 86-வது நிமிடத்திலும், காயம் காரணமாக 10 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய மார்டோ அசென்சியோ 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலம் பென்ஜிமா (மொத்தம் 243 கோல்கள்) ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை 29 ஆட்டத்தில் ஆடியுள்ள ரியல் மாட்ரிட் அணி 18 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 62 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 64 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *