கவிதை | தீர்வாம் தேர்தலாம் | பா.உதயன்


 
கடைசி ஆயுதத்தையும்
ஐயா கையில
எடுத்துப் பார்த்தார்
சமரச அரசியலோடு
சமாதானம் வரும் என்று
சிங்கக் கோ(கொ)டியை
உயர்த்திப் பிடித்தார்
ஐயா பாவம்
இப்போ வெறும்
கையோடு நிற்கிறார்
அடுத்த தேர்தலைப் பார்த்தபடி
அது சரி
அவன் கொடுத்தா தானே
ஐயாவும் வேண்டித் தருவார்
சும்மா சொல்லுங்கோ ஐயா
தீபாவளிக்குள் தீர்வு
கிடைக்கும் என்று
பாவம் சனம் நம்பி வந்து
வாக்குப் போடும்
ஏமாந்தே பழகப்பட்ட
சனம் நாங்க ஐயா
இந்தியா வரும் என்றே
இருந்த சனங்க நாங்க ஐயா
ஆன அவனும் இவனும்
முழுசா தின்று முடிச்சான்
முள்ளிவாய்க்காலை ஐயா
இன்னும் ஒரு முறை
ஏமாறுவதில்
என்ன குறை ஐயா
புலிகள் போனால்
சமாதானம் வரும்
என்ற சனத்தையும்
சந்திச்சுப் பாருங்க ஐயா
மாற்று வழி ஏதும்
கேட்டுப் பாருங்கோவன்
மசியுமா சிங்களம் என்று.
பா.உதயன் 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *