முடி கொட்டிட்டே இருக்க பொதுவான காரணமே இந்த 4 விஷயந்தான்! உங்களுக்கு தெரியுமா!


 

முடி உதிர்வு பிரச்சனை வயது பேதமில்லாமல் இருபாலரையும் தாக்க தொடங்கியிருக்கிறது. என்ன செய்தாலும் முடி உதிர்வை கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதே பலரது புலம்பலாக இருக்கிறது. வயதான பிறகு அல்லது நடுத்தர வயதுக்கு பிறகு முடி உதிர்வு என்பது ஏற்றுக்கொள்ளகூடியது. ஆனால் வளரும் பருவத்தில் முடி அதிகமாக உதிர்வது தீர்க்க வேண்டிய பிரச்சனையே.

எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்பது போல் முடி உதிர்வுக்கும் தீர்வு உண்டு. ஆனால் என்ன காரணத்தினால் முடி உதிர்வு என்பதை அறிய முடிந்தால் தான் அதை சரிசெய்யவும் பாதுகாக்கவும் முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணங்கள் இருக்கலாம். அதே போன்று பொதுவான காரணங்களும் கூட உண்டு. அது குறித்து தான் பார்க்க போகிறோம்.

கூந்தல் வளர்ச்சி

தலையில் ஆயிரக்கணக்கான நுண்குமிழில் வளர்ந்து வேர் பகுதிகளை உண்டாக்குகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களது ஆரோக்கியத்துக்கேற்ப 1இலட்சம் முதல் 1 இலட்சத்து 50 ஆயிரம் வரை முடிகள் இருக்கும். இவை ஒவ்வொருவர் உடல்நிலைக்கும் ஏற்ப மாறுபடும்.

ஒவ்வொரு முடியும் 3 ஆண்டுகள் வரை சராசரியாக வலுவோடு தலையில் இருக்கும். இந்த வலு குறையும் போதுதான் முடி உதிர்வு பிரச்சனை உண்டாகிறது. கூந்தல் வளர்ந்து நடுநிலைமையில் இருந்து பிறகு உதிர வேண்டும். இதுதான் இயல்பானது.

ஆரோக்கியமான முடியாக இருந்தால் அவை 30 இன்ச் நீளம் வரையிலும் வளரும். இல்லையெனில் அவை பாதியில் உடைந்து விடும். இப்படி பாதியில் உடையும் முடிக்கு காரணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

 

பரம்பரை

முடி வளர்ச்சிக்கு பரம்பரை மிக முக்கிய காரணம். தலை தலைமுறையாக முன்னோர்களுக்கு அதிக பாதிப்பில்லாத அடர்ந்த கூந்தலை பெற்றிருந்தால் அவை உங்களுக்கும் வழி வழியாக வரக்கூடும். அதே நேரம் அவர்களுக்கு கூந்தல் பிரச்சனை முடி உதிர்வு இருந்தால் அந்த பாதிப்பு அடுத்த தலைமுறையினரையும் தொடரும்.

வழுக்கை பிரச்சனை கூட வழிவழியாக பரம்பரையாக தோன்றகூடியதுதான். தொடர்ந்து கூந்தலை பராமரிப்பதன் மூலம் இவை வராமல் தடுக்கமுடியும். குறைந்தது வழுக்கை வருவதை நீண்ட காலம் தள்ளிபோடவும் முடியும்.

 

தொடர் மாத்திரைகள்

சிலர் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நேரங்களில் அதன் பாதிப்புகள் கூந்தல் உதிர்வில் பிரதிபலிக்கும்.

தற்காலிகமான சிகிச்சையில் உதிரும் முடி உதிர்வை சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பின் மூலம் கட்டுப்படுத்தலாம். தீரா நோய்களுக்கு சிகிச்சை எடுத்துகொள்ளும் போது அவை தொடர்ந்து கூந்தல் முடி உதிர்வை உண்டாக்கி கொண்டே இருக்கும். இதனால் கூந்தலில் வளர்ச்சி இருந்தாலும் கூட உதிர்வும் அதிகப்படியாகவே இருக்கும். சிகிச்சை எடுத்துகொள்ளும் போது கூந்தல் பராமரிப்பும் கூடுதலாக கூந்தல் நிபுணர்களின் ஆலோசனையையும் பின்பற்றுவது அவசியம்.

இவை தவிர நீரிழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம் காரணங்களாலும் கூட முடி உதிர்வு உண்டாவது உண்டு.

 

உரிய பராமரிப்பின்மை

மேற்கண்ட மூன்று காரணங்கள் தான் பெரும்பாலும் முடி உதிர்வுக்கு பொதுவான காரணங்கள். ஆனால் இவை எதுவுமே இல்லாமலே கூந்தல் உதிர்வு இருந்தால் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். ஏனெனில் இவை உங்கள் பராமரிப்பில் இருக்கும் குறைபாடு அல்லது உரிய பராமரிப்பின்மையே. இதை எளிதாக் தீர்த்துகொள்ளவும் முடியும்.

நீங்கள் உங்கள் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகளாக சொல்வது இதுதான். வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு குளித்து கூந்தலை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். இல்லையெனில் கூந்தலில் அழுக்கு படிந்து உதிர்வு அதிகரிக்க வாய்ப்புண்டு.

கூந்தலை சீவாமல் விரித்து விடுவதால் சிக்கு நேருவது. கூந்தலை சுத்தம் செய்ய அவ்வபோது ஷாம்புகளை மாற்றுவது, அதிக கெமிக்கல் நிறைந்த பொருள்களை பயன்படுத்துவது போன்றவை தான்.

மேற்கண்டவை தவிர வேறு பெரிய தனிப்பட்ட காரணங்களால் உங்கள் உதிர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இயன்றவரை கூந்தல் பராமரிப்பை கவனமாக மேற்கொள்ளுங்கள்.

 

நன்றி : தமிழ் சமயம்

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *